ETV Bharat / sports

அட்ராசக்க.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சிக்சரில் மிரட்டும் டிராவிட் மகன்! - Rahul Dravid son Samit viral video - RAHUL DRAVID SON SAMIT VIRAL VIDEO

மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் சிக்சர் விளாசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Samit Dravid (Screen Grab image from X)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 4:15 PM IST

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட்டின் சுவர் என அனைவராலும் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன், திறமையான பயிற்சியாளர் என பல்வேறு பரிமாணங்களில் இந்திய அணிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தந்தையை போலவே கிரிக்கெட்டில் ஜொலிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மகாராஜா டி20 கிரிக்கெட் தொடரில் சமித் டிராவிட் அடித்த ஒரு சிக்சர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மகாராஜா டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் சொதப்பிய சமித் டிராவிட் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார்.

அந்த ஆட்டத்தில் சமித் டிராவிட் அடித்த இமாலய சிக்சர் ரசிகர்களை ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியது. இருப்பினும் அந்த ஆட்டத்தில் சமித் டிராவிட்டின் அணி தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் நடுவே மழை குறிக்கிட்ட நிலையில், இறுதியில் சமித் டிராவிட்டின் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முன்னதாக 2023-24 கூச் பிகர் கோப்பையில் விளையாடிய சமித் டிராவிட் அதிரடியாக விளையாடி இருந்தார். மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய சமித் டிராவிட் அந்த தொடரில் மொத்தம் 362 ரன்கள் குவித்தார். இதில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக 98 ரன்களை சமித் டிராவிட் விளாசினார். மேலும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியும், இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.

இதையும் படிங்க: கைமாறுகிறதா பஞ்சாப் கிங்ஸ்? நீதிமன்றத்துக்கு வந்த விவகாரம்! பிரீத்தி ஜிந்தாவுக்கு என்ன நடந்தது? - Punjab kings

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.