ETV Bharat / sports

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் புதிய சாதனை! - கிரிக்கெட்

Cricket Player Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஷ்வின்
ரவிச்சந்திரன் அஷ்வின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 7:17 PM IST

ராஞ்சி: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார் அஷ்வின். தற்போது 500 விக்கெட்களை கடந்து உலக அளவில் 9வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் உள்ளார்.

இந்த நிலையில் தான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்து அணி இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அந்த வகையில், 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த 4வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.23) ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் ஜானி பேரிஸ்டோவின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார்.

1000 ரன்கள், 100 விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் (23 போட்டிகள்) அஷ்வின் 2வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் இயான் போதம் 22 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

டெஸ்டில் எதிரணிக்கு எதிராக 1000 ரன்கள் + 100 விக்கெட்டுகள்

  • ஜார்ஜ் கிஃப்பன் vs இங்கிலாந்து
  • மோனி நோபல் vs இங்கிலாந்து
  • வில்பிரட் ரோட்ஸ் vs ஆஸ்திரேலியா
  • கார்ஃபீல்ட் சோபர்ஸ் vs இங்கிலாந்து
  • இயான் போத்தம் vs ஆஸ்திரேலியா
  • ஸ்டூவர்ட் பிராட் vs ஆஸிதிரேலியா
  • ரவிச்சந்திரன் அஷ்வின் vs இங்கிலாந்து

இதையும் படிங்க: 4வது டெஸ்ட் போட்டி; ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு.. ஜோ ரூட் சதம் விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.