சண்டிகர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகரில் இன்று (ஏப்.21) இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
பஞ்சாப் கிங்ஸ் : சாம் கரன் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
குஜராத் டைட்டன்ஸ் : விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷாருக்கான், ராகுல் தெவாடியா, சாய் கிஷோர், ரஷித் கான், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா.
இதையும் படிங்க : பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு! அதிரடி ஆட்டம் தொடருமா? - IPL2024 RCB Vs KKR Match Highlights