ETV Bharat / sports

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் பஞ்சாப்; கோயட்சி, பும்ரா அபாரம்! - MI Vs PBKS

IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் பஞ்சாப்

author img

By PTI

Published : Apr 18, 2024, 10:36 PM IST

சண்டிகர்: 17வது ஐபிஎல் தொடரில், 33வது போட்டி சண்டிகரில் உள்ள முல்லான்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஆட்டத்தை துவக்கியது. ரபாடா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கிஷன் 8 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளாக விளாசினார். மறுபுறம், ரோகித் சர்மா சிக்சர்களாக விளாசினார். ரோகித் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாம் கரண் பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா, சூர்யகுமாருக்கு நல்ல கம்பெனி கொடுத்து பவுண்டரிகளாக விளாசினார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களுக்கு 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாம் கரண் பந்தில் அவுட்டானார்.

மறுமுனையில் திலக் வர்மா சிக்சர்களாக விளாசினார். கேப்டன் பாண்டியா 10 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட், வந்த வேகத்தில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தார். ஆனால், அவரும் ஹர்ஷல் படேல் பந்தில் 14 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஷெப்பேர்ட் 1 ரன்னில் அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பிரப்சிம்ரன் சிங் கோயட்சி ஓவரில் டக் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரோசோவ் 1 ரன்னில் பும்ராவின் அபார யார்க்கரில் அவுட்டானார். சற்று முன்னதாக களமிறங்கிய பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு, கீப்பர் கிஷனிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் அவுட்டானார்.

அணியை மீட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் களமிறங்கிய லிவிங்ஸ்டன் கோயட்சியின் பவுண்சரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். 14 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து பஞ்சாப் அணி திணறிய நிலையில், ஹர்பிரித் சிங், சஷாங்க் சிங் அணியை மீட்கும் முயற்சியில் பொறுமையாக விளையாடி வருகின்றனர். இத்தொடரின் ஆரம்பத்தில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் அணி தற்போது திணறி வருகிறது.

இதையும் படிங்க: கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதா? தேர்தல் ஆணையம் திட்டவட்ட மறுப்பு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.