ETV Bharat / sports

நார்வே செஸ் தொடரில் சாதித்த பிரக்ஞானந்தா, வைஷாலி.. அமைச்சர் உதயநிதி வாழ்த்து! - Praggnanandhaa

praggnanandhaa defeated carlsen: நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரக்ஞானந்தா, வைஷாலி
பிரக்ஞானந்தா, வைஷாலி (Credits - ChesscomIndia)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 9:21 AM IST

Updated : May 30, 2024, 1:43 PM IST

நார்வே: சர்வதேச செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறும் இந்த செஸ் தொடரில் அதிக புள்ளிகள் பெறுபவர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவர். நார்வே நாட்டைச் சேர்ந்த 5 முறை சாம்பியனான கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 6 பேர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

3வது சுற்றில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை, பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இந்த சுற்றில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் 10 சுற்றுகள் கொண்ட இந்த நார்வே செஸ் தொடரில் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார். 10 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் 3 சுற்றுகள் முடிந்துள்ளது. மீதம் 7 சுற்றுகள் நடைபெற்று, அதில் அதிக புள்ளிகளை பெறுபவர் உலக சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.

தற்போது இந்தியாவின் பிரக்ஞானந்தா முதல் இடத்தில் உள்ளதால் சாம்பியம் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதேபோல் நார்வே செஸ் தொடரில் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர். இத்தொடரின் இரண்டாவது சுற்றில் வைஷாலி ஹம்பியை கிளாசிக்கல் முறையில் எதிர்கொண்டார். அதில் 45 நகர்த்தலில் ஹம்பியை வீழ்த்தி 4.0 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இதனைதொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், "நார்வே செஸ் தொடரில் விளையாடி சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் செஸ் சுற்றில் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்தியுள்ளார். அதேபோல் முதல்முறை நடைபெற்ற பெண்கள் நார்வே செஸ் தொடரில் வைஷாலி, ஹம்பியை கிளாசிக்கல் சுற்றில் வீழ்த்தியது அபார சாதனையாகும். உடன்பிறப்புகளின் சாதனைகள் தொடரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்

இதையும் படிங்க: கரூரில் விறுவிறுப்பாக நடந்து வந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு!

Last Updated : May 30, 2024, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.