பாரீஸ்: உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்துத் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சார்பாக 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
Will the 9️⃣0️⃣m mark be breached at #Paris2024?🤔
— JioCinema (@JioCinema) August 8, 2024
Watch #NeerajChopra defend his Olympic Gold against formidable opponents, tonight at 11:55 PM, LIVE on #Sports18 & stream FREE on #JioCinema.#OlympicsonJioCinema #OlympicsonSports18 #JioCinemaSports #Olympics #Athletics pic.twitter.com/SqLOJcQlrs
இதுவரை இந்திய அணி 4 வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது. ஆனால் நடப்பு தொடரில் ஒரு தங்கப் பதக்கத்தைக் கூட இந்தியா வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கப் பதக்க கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். இவ்வாறான எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.55 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது.
அதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ஆறு முயற்சிகள் வழங்கப்பட்டது.
இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் ஃபவுலானார். இருப்பினும் தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். இதே போல் பாகிஸ்தான் வீரர் ஹர்ஷத் நதீம், தன்னுடைய முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் ஃபவுலானார்.
அதனைத் தொடர்ந்து தனது 2வது முயற்சிக்கு தயாரான ஹர்ஷத் நதீம் யாருமே எதிர்பார்க்காத வகையில் 92.97 மீட்டர் எறிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதுவரை ஈட்டி எறிதலில் அதிகபட்ச தூரம் 90.57 மீட்டர் ஆகும். தற்போது அதனை அர்ஷத் முறியடித்துள்ளார். இதனை தொடர்ந்து மற்ற நாட்டை சேர்ந்த வீரர்கள் வீசினாலும் யாரும் அர்ஷத் மற்றும் நீரஜ் சோப்ரா அருகே கூட வர முடியவில்லை.
We are always natural friends 🇵🇰💕🇮🇳#ArshadNadeem #NeerajChopra #PakistanZindabad #GOLD #OlympicGamesParis pic.twitter.com/5YyuWORRk7
— Arshad Nadeem 🇵🇰 (@ArshadNadeemPak) August 8, 2024
இறுதியில் இதன் மூலம் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்திலிருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதுதான் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் வெள்ளி பதக்கம் ஆகும். இதே போல், 88.54 மீட்டர் வீசிய கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் வெண்கலம் வென்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம்! ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வரலாறு!