ஐதராபாத்: இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற முக்கிய காரணியாக இருந்தவர்களில் அர்ச்சனா காமத்தும் ஒருவர்.
24 வயதான அர்ச்சனா காமத் அடுத்தடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்க வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்த திட்டமிட்டதன் காரணமாக அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியா அவர், "பதக்கம் வெல்வது என்பது கடினமான ஒன்று. அர்ச்சனா காமத் சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதல் 100 இடங்களில் கூட இல்லை. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக அவர் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருவதற்கு இன்னும் கடினமான உழைப்பு தேவை என்பதை அவர் அறிந்து வைத்து உள்ளார்.
அதனால், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாடு சென்று உயர் கல்வி கற்க அவர் திட்டமிட்டுள்ளார்" என்று அர்ச்சனா காமத்தின் பயிற்சியாளர் அன்சுல் தெரிவித்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி சிறப்பாக செயல்பட அர்ச்சனா காமத்தும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1 மணி நேரத்துல் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்! சாதனை படைத்த வீரர் யார் தெரியுமா? - Cristiano Ronaldo YouTube Channel