ஹைதராபாத்: விளையாட்டு உலகின் திருவிழா என்று அழைக்கப்படும் 33-ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு செய்ன் நதியில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்தப்படவுள்ளது.
நீடா அம்பானி: இந்தநிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் கமிட்டியின் (international olympic committee) 142 ஆவது கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.இதில் 100 சதவீத வாக்குகளுடன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக மீண்டும் நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பாட்டர்.
Media Release - Mrs. Nita M. Ambani Re-Elected Unanimously as IOC Member
— Reliance Industries Limited (@RIL_Updates) July 24, 2024
Paris 24th July 2024: Ahead of the opening ceremony of the Paris 2024 Olympic Games this weekend, the International Olympic Committee (IOC) has today announced that Mrs Nita M. Ambani, leading Indian… pic.twitter.com/rENdUVRWFE
இது குறித்து நீடா அம்பாணி கூறுகையில்,"சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறோன். ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள், என் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேம்படுத்துவேன்" என தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நீடா அம்பானி முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஒலிப்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையை அப்போது அவர் படைத்தார்.
இந்தியா ஹவுஸ்: ஒலிம்பிக் போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் தங்குவதற்காக, ஒவ்வொரு நாடுகளும் இல்லம் ஒன்றை அமைக்கும். வீரர்களின் தற்காலிக ஓய்வு அறையாகவும் இது பயன்படுத்தப்படும். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 35க்கும் அதிகமான இல்லங்கள் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதன்முறையாக இந்தியா தனது இல்லத்தை (இந்தியா ஹவுஸ்) பாரீஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜொலிக்கப்போகும் வித்யா ராம்ராஜ் - சுபா வெங்கடேசன்.. இதுவரை இவர்களின் சாதனைகள் என்ன?