ETV Bharat / sports

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 12:59 PM IST

NZ VS RSA: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 281 ரன்கள் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது.

NZ VS RSA
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து

நியூசிலாந்து: தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்.4 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 511 என்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 162 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர் நீல் பிராண்ட் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரூவான் டி ஸ்குவார்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா 2 சதங்களையும், வில்லியம்சன் சதத்தையும் விளாசினார்.

டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் சதம் விளாசினார். இந்த அபார ஆட்டத்தின் மூலன் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 5 வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன், கிளென் டர்னர், ஜியாஃப் ஹோவார்த், ஆண்ட்ரூ ஜோன்ஸ், பீட்டர் ஃபுல்டன், ஆகியோர் சதம் விளாசினார்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸ்ஸில் இரட்டை சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 26 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 528 ரன்கள் முன்னிலை வகித்தது. களத்தில் மிட்செல் மற்றும் டாம் பெண்டல் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் ஓவர் நைட் டிக்ளரேசன் (Declaration) நடந்தாக தெரிகிறது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்கமாக எட்வர்ட் மூர் - நீல் பிராண்ட் ஜோடி களம் கண்டது. வந்த வேகத்திலே மூர் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பிச் சென்றார். அதன்பின் ரேனார்ட் வான் டோண்டர் களத்தில் இறங்கினார். 3 ஓவர் முடிவிற்கு 5-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.

4வது ஓவரில் மூர் தனது விக்கெட்டை இழக்க, சுபைர் ஹம்சா களம் கண்டு விளையாடினார். 10ஓவர் கழித்து தென்னாப்பிரிக்கா அணிக்கு ஹம்சா பவுண்டரியைப் பதிவு செய்தார். 20ஓவர் முடிவிற்கு 39-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.

ரேனார்ட் வான் டோண்டர் - சுபைர் ஹம்சா ஜோடி இணைந்து அணிக்கு ரன்களை குவித்தனர். 25 ஓவர் முடிவிற்கு 59-2 என்ற கணக்கில் விளையாடியது. 31வது ஓவரில் வான் டோண்டர் ஜேமிசன் வீசிய பந்தை லாதமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டோண்டர் 83 பந்துகளுக்கு 2 பவுண்டரிகளை விளாசி 31 ரன்கள் எடுத்தார்.

ஹம்சாவுடன் டேவிட் பெடிங்காம் இணைந்தார். 33வது ஓவரில் ஹம்சா அவுட் ஆனார். 92 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள் வீதம் 36 ரன்கள் எடுத்தார். டேவிட் பெடிங்காம் - கீகன் பீட்டர்சன் ஜோடி அணிக்கு சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. 35வது ஓவரில் 3 பவுண்டரிகளை பெடிங்காம் விளாசி அசத்தினார்.

47வது ஓவரில் மாட் ஹென்றி வீசிய பந்தில் பெடிங்காம் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 47 ஓவர் முடிவிற்கு 121-4 என்ற கணக்கில் விளையாடியது. டேவிட் பெடிங்காம் - கீகன் பீட்டர்சன் பார்ட்னர்ஷிப்பில் அணிக்கு 50 ரன்கள் வந்தன.

51வது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரி லைன்க்கு விளாசி, டெஸ்ட் போட்டியின் இரண்டாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். 54வது ஓவரில் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். இதன் மூலம் பெடிங்காம் சதம் அடிப்பார் என எதிர்பார்த்தனர்.

57வது ஓவரில் பெடிங்காம் தனது விக்கெட்டை இழந்தார். 96பந்துகளுக்கு 13 பவுண்டரிகள், 3 சிக்ஸ் வீதம் 87 ரன்கள் எடுத்தார். பின் ரூவான் டி ஸ்குவார்ட் களம் கண்டார். 59வது ஓவரின் கடைசி பந்தில் கீகன் பீட்டர்சன் அவுட் ஆனார். பின் ஃபொர்ட்டின் களம் கண்டார். 60 ஓவர் முடிவிற்கு 181-6 என்ற கணக்கில் அணி விளையாடியது.

65 ஓவர் முடிவிற்கு 198-6 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. 66வது ஓவரில் ஃபொர்ட்டின் தனது விக்கெட்டை இழந்தார். ஃபொர்ட்டின் 19 பந்துகளுக்கு 2 பவுண்டரிகள் வீதம் 11 ரன்கள் எடுத்தார்.

களத்தில் ஓலிவியர் - ரூவான் டி ஸ்குவார்ட் விளையாடினர். வந்த வேகத்தில் ஓலிவியர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் சென்றார். பின்னர், மூர்கி களம் கண்டார். மூர்கி சான்ட்னர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் எல்பிடப்ள்யூ(lbw) ஆனார். 76ஓவர் முடிவிற்கு 223-9 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.

பின்னர், டேன் பேட்டர்சன் களம் கண்டார். 77வது ஓவரில் டேன் பேட்டர்சன் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் வீசிய 80வது ஓவரின் கடைசிப் பந்தில் பேட்டர்சன் அவுட் ஆனார். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 247 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் பெடிங்காம் அதிகபட்சமாக 87 ரன்களைக் குவித்தார். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் 4 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், சவுத்தி, மாட் ஹென்றி, க்ளென் பிலிப்ஸ் ஆகிய மூவரும் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 281 ரன்கள் முன்னிலை பெற்று முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.