ETV Bharat / sports

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி; தமிழக வீரர்கள் அசத்தல்! - National Level Taekwondo summit

பொள்ளாச்சி தனியார் பள்ளியில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.

தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி
தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி (Image Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 9, 2024, 7:24 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி பகுதியில் உள்ள திஷா பள்ளியில் சிஐஎஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சியாளர் கோதண்டம் பேட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

டேக்வாண்டோ போட்டி 14,17,19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது 8ஆம் தேதி துவங்கி 9, 10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இரண்டு நாள் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் நாளை கடைசி நாளில் நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

முன்னதாக இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவை தொடர்ந்து பயிற்சியாளர் கோதண்டம் கூறுகையில், "இதில் 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவி மாணவிகள் வண்ணமயமான உடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கிய நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும் கோவை மாவட்டத்தில் முதல் முறையாக சென்சார் பாயிண்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார். தமிழகத்தில் முதல் முறையாக இந்த விளையாட்டு தொடரில் சென்சார் பாயின்ட் மூலம் புள்ளிகள் கணக்கிடப்படும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள்: செப்.11 துவக்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி! - junior athletics championship

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.