ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பையில் நடராஜன் இடம் பெறாதது ஏன்? தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்! - Cricket Player NATARAJAN T - CRICKET PLAYER NATARAJAN T

Indian Cricket Player T.Natarajan: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வெளியாகியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசி வரும் நடராஜன் இடம் பெறாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடராஜன்
நடராஜன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 7:12 PM IST

ஹைதராபாத்: அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

இந்த நிலையில், இத்தொடருக்கான அணியை பிசிசிஐ இன்று (ஏப்.30) மாலை 4 மணி அளவில் அறிவித்திருக்கிறது. அதில் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

குறிப்பாக 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 1 ஓவரை மெயிடன் செய்து 4.80 எகானமியுடன் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். மேலும், இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் அவர் 13 விக்கெட்களை வீழ்த்தி பெர்ப்பில் கேப்பிற்கான போட்டியில் உள்ளார்.

சமீபத்தில் நடராஜன் குறித்து பேசிய முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவாரா என்று என்னால் கருத்து கூற முடியாது. ஏன் என்றால் நான் வேறு நாட்டை சேர்ந்தவன். அவர் இடம் பெறுவது இந்திய அணியின் தேர்வர்கள் கையில் தான் உள்ளது. ஆனால் அவர் அதற்கு முழு தகுதி உடையவர்" என கூறியிருந்தார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம் பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது மொகமத் சிராஜ் பதிலாக நடராஜனை தேர்வு செய்து இருக்கலாம் என தங்களது ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் அணியில் தேர்வானதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தாலும், நடராஜன் போன்ற எகானமிக்கு பவுலர் அணியில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! - T20 World Cup India Squad

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.