ETV Bharat / sports

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தி நமீபியா அசத்தல் வெற்றி! - T20 WORLD CUP 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 12:50 PM IST

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது.

Etv Bharat
Flags of Oman and Namibia (Getty Images)

பார்படோஸ் தீவுகள்: 9வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இந்த முறை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பார்படோஸ் தீவுகளில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் ஓமன் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஓமன் அணியில் காஷ்யப் பிரஜாபதி, நஷிம் குஷி ஆகியோர் அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஆரம்பமே ஓமன் அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்னரே அந்த அணி விக்கெட் கணக்கை தொடங்கியது.

தொடக்க வீரர் காஷ்யாப் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அகிப் இல்யாஸ் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஓமன் அணிக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் நஷிமும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனிடையே கூட்டணி அமைத்த ஷேஷம் மக்சூத் மற்றும் காலித் கலி மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இருப்பினும் இந்த கூட்டணியை நமீபியா அணியின் பெர்னாட் பிரித்தார்.

அவரது பந்தில் மக்சூத் 22 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யுவாகி ஆட்டமிழந்தார். இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அயன் கான் 15 ரன் முகமது நதீம் 6 ரன், காலித் கலி 34 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய நம்பீயா அணியிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. தொடக்க வீரர் மைக்கல் வான் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் நிகோலஸ் டாவின் 24 ரன்னும், கேப்டன் எராஸ்மஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் நீடித்த ஜென் பிரய்லிங்க் 45 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார்.

இறுதி ஓவரில் நமீபியா அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு விக்கெட்டுகள் இழந்து ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் விளையாடிய நமீபியா அணி 21 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஓமன் அணியால் சூப்பர் ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து நமீபிய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: உலகக் கோப்பை டி20 2024; இலங்கை - தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை; வெற்றியுடன் துவக்கப்போவது யார்? - T20 World Cup 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.