ETV Bharat / sports

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; ஒடிசா, மகாராஷ்டிரா அணிகள் அபார வெற்றி! - Murugappa Gold Cup Hockey - MURUGAPPA GOLD CUP HOCKEY

Murugappa Gold Cup Hockey 2024: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் இரண்டாவது நாளில் நடைபெற்ற 3 போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற்றது என்பது குறித்து பார்ப்போம்.

ஹாக்கி  வீரர்கள்
ஹாக்கி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 7:08 AM IST

சென்னை: 95வது 'முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டி' சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற முதல் போட்டியில் பி பிரிவில் உள்ள ஒடிசா - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்தப் போட்டியின் 22வது நிமிடத்தில் ஒடிசா அணியைச் சேர்ந்த எக்கா ராகுல் கோல் அடித்தார்.

ஒடிசா அபார வெற்றி: அவரைத் தொடர்ந்து, 29வது நிமிடத்தில் டிர்கி ரஜித் ஆகாஷ் கிடைத்த ஒரு ஸ்ட்ரைக்கை கோலாக மாற்றினார். பின்னர், போட்டியின் 30வது நிமிடத்தில் கங்காடி சதீஷ் கோல் அடித்தார். ஆட்டம் ஒடிசா அணியின் பக்கம் திரும்பிச் சென்ற வேளையில், ஒடிசா அணியின் சதீஷ் மீண்டும் 56வது நிமிடத்தில் மற்றொரு கோலைப் பதிவு செய்தார்.

4-0 கணக்கில் ஒடிசா அணி ஆதிக்கத்தைச் செலுத்துக் கொண்டிருக்கும் பொழுது, கர்நாடகா ஹாக்கி அணியைச் சேர்ந்த சேத்தன் மல்லப்பா 60 நிமிடத்தில் கோல் அடித்து தங்கள் புள்ளிக் கணக்கை சற்று தாமதமாகத் தொடங்கினர். ஆட்ட நேரம் முடிவில் 4-1 என்ற கணக்கில் ஒடிசா ஹாக்கி சங்க அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவை மேளதாளத்துடன் வரவேற்ற சொந்த மண்!

பிபிசிஎல்-ஐ வீழ்த்திய மகாராஷ்டிரா: தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியும் - பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) அணியும் மோதியது. போட்டி தொடங்கிய 11வது நிமிடத்தில் பிபிசிஎல் அணியின் தேஜஸ் சவால் கோல் அடித்து கணக்கைத் தொடங்கி வைத்தார்.

அந்த அணியின் மற்றொரு வீரர் ராஜிந்திர சிங் 15வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் பிபிசிஎல் அணி முன்னிலையில் இருந்தது. ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்ற நேரத்தில், மகாராஷ்டிரா அணியின் மையூர் தனவதே தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.

ஆட்டம் 2-1 என்ற கணக்கில் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பாதி வரை இப்படியே சென்ற நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட மகாராஷ்டிரா அணி கோல் அடிக்கத் தொடங்கியது. அந்த அணியின் ஸ்டீபன் ஸ்வாமி இரண்டு கோல்களை அடித்து 3-2 என்ற கணக்கில் ஆட்டத்தைத் திருப்பினார்.

பின்னர், 45வது மற்றும் 46வது நிமிடங்களில் பெனால்டி கார்னரில் ஒரு கோலையும், ஓபன் பிளேயில் மற்றொரு கோலையும் அடித்தார். இதனைத் தொடர்ந்து 2 கோல்களை பிபிசிஎல் அடித்தது. இருப்பினும், ஆட்ட நேர முடிவில் 5-4 என்ற கணக்கில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.