ETV Bharat / sports

விராட் கோலிக்கே வாடகைக்கு வீடு கொடுத்த கிரிக்கெட் வீரர்! Virat Kohli rented home from Richest cricketer - RICHEST CRICKET PLAYER IN INDIA

விராட் கோலிக்கே வீடு வாடகைக்கு கொடுத்த பணக்கார கிரிக்கெட் வீரர் குறித்து இந்தத் செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Virat Kohli (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 9, 2024, 6:44 PM IST

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட்டில் பல முன்னணி வீரர்கள் பெரும் செல்வந்தர்களாக அதிக சொத்துக்களை கொண்டு இருக்கின்றனர். உதாரணத்திற்கு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆயிரத்து 427 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டு இருக்கிறார். அவரைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி 932 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டு இருக்கிறார்.

ஆனால் இங்கு ஒரு வீரர் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையை காட்டிலும் 4 மடங்கு அளவில் பெரிய மாளிகைகளை கொண்டு இருக்கிறார். அவர் தான் பரோடா மகாராஜா சமர்ஜித் சிங் கெய்க்வாட், அரச குடும்பத்தை சேர்ந்தவரான சமர்ஜித் சிங்கின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு அவர் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் அவரது மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர பரோடாவில் நிலங்கள் என பல்வேறு அசையா சொத்துக்கள் இருப்பது கூறப்படுகிறது. மகாராஜா ரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெய்க்வாட் என்பவரின் மகன் தன சமர்ஜித் சிங் கெய்க்வாட்.

கடந்த 2012ஆம் ஆண்டு ரஞ்சித்சிங் மறைவை தொடர்ந்து பரோடா மகாராஜாவாக சமர்ஜித் சிங் பொற்றுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் அரச பரம்பரைக்கு சொந்தமான நிலங்கள், மாளிகைகள், குஜராத் முதல் பனாரஸ் வரையில் உள்ள 17 பெரும் கோயில்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறார்.

பரோடாவில் இவர் வசிக்கும் மாளிகை லட்சுமி விலாஸ் என அழைக்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய தனியார் மாளிகைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அரச குடும்பம் வசிக்கும் பக்கிங்ஹாம் மாளிகையை காட்டிலும் அளவில் 4 மடங்கு பெரிய மாளிகைகள் என சமர்ஜித்சிங்கின் சொத்து பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்ட சமர்ஜித் சிங், ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடி உள்ளார். தொடர்ந்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, மும்பையில் தங்களது ஆரம்ப கால வாழ்க்கை சமர்ஜித் சிங்கிற்கு சொந்தமான குடியிருப்பில் தான் கழித்து உள்ளனர். அதாவது சமர்ஜித்சிங்கின் குடியிருப்பில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய தொடரில் மிஸ்சாகும் நியூசிலாந்து நட்சத்திரம்! யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.