பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.30) துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர் மற்றும் சரப்ஜோத் சிங் இணை விளையாடியாது. அபாரமாக விளையாடிய இந்திய இணை வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.
🇮🇳🔥 𝗜𝗻𝗱𝗶𝗮'𝘀 𝗲𝗹𝗶𝘁𝗲 𝘀𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀! A historic achievement for Manu Bhaker and Sarabjot Singh as they win India's first-ever team medal in shooting at the Olympics.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 30, 2024
🧐 Here's a look at India's shooting medallists in the Olympics over the years.
👉 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄… pic.twitter.com/Vf2yp4r2vH
கொரியாவின் Lee Wonho மற்றும் Oh Ye Jin இணையை எதிர்கொண்ட இந்திய ஜோடி 16-க்கு 10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று பதக்கத்தை தட்டிச் சென்றது. ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் இந்திய அணி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மனு பாகெர் படைத்து உள்ளார். இதற்கு முன் ஒற்றையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகெர் வெணகலம் வென்று இருந்தார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 22 வயதான மனு பாகெர் பாரீஸ் ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்களை வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பதக்க வென்ற மனு பாகெர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இதுவரை எந்த இந்திய துப்பாக்கிச் சுடுதல் ஜோடியும் செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள். இந்தியாவின் முதல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் குழு பதக்கம். இந்த தருணத்தை அனுபவிக்கவும், நீங்கள் அதை சம்பாதித்துவிட்டீர்கள். பெருமையாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
Manu & Sarabjot: You've done what no Indian shooting pair has done before. India's first Olympic shooting team medal. Savour this moment, you've earned it! Proud 👏 🇮🇳 #Olympics2024 #Paris2024 #Shooting #ManuBhaker #SarabjotSingh
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) July 30, 2024
அதேபோல் மனு பாகெர் -சரப்ஜோத் சிங் ஜோடிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ஒலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகெர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்துக்கள்.
இருவரும் சிறப்பான திறமையையும், குழுப் பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்ப முடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மனுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம், இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
Our shooters continue to make us proud!
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
Congratulations to @realmanubhaker and Sarabjot Singh for winning the Bronze medal in the 10m Air Pistol Mixed Team event at the #Olympics. Both of them have shown great skills and teamwork. India is incredibly delighted.
For Manu, this… pic.twitter.com/loUsQjnLbN
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் 2024: 4வது நாளில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி? - Paris Olympics 2024