ETV Bharat / sports

ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி: திருவனந்தபுரம் அணியை வீழ்த்தி மதுரை அணி அபார வெற்றி! - Southern Railway Kabaddi Tournament

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 9, 2024, 8:58 AM IST

Madurai vs Thiruvananthapuram Kabaddi Team: தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களுக்கிடையே ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டியில், திருவனந்தபுரம் அணியை வீழ்த்தி மதுரை அணி தனது முதல் வெற்றியை பதித்துள்ளது.

கபடி வீரர்கள்
கபடி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களுக்கிடையேயான ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி மதுரையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) துவங்கியது. மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் முதல் நாள் கபடி போட்டிகளை, மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.நாகேஸ்வரராவ் துவக்கி வைத்தார்.

இந்த போட்டிகளில் சென்னை, சேலம், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் மோதின. அதில் திருச்சி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. சேலம் அணி 13 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது.

அடுத்து நடைபெற்ற போட்டியில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் அணிகள் மோதின. இதில் மதுரை அணி 26 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது. மதுரை அணியை எதிர்த்துப் போட்டியிட்ட திருவனந்தபுரம் அணியால் 9 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது.

மதுரை ரயில்வே அணி
மதுரை ரயில்வே அணி (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது மதுரையில் நடைபெறும் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், அகில இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை கபடி அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

முன்னதாக, துவக்க விழாவில் கோட்ட பாதுகாப்புப் படை ஆணையர் ஏ.கே.கார்த்திகேயன், துணை ஆணையர் எம். சிவதாஸ், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன், உதவி ரயில் பாதுகாப்பு அதிகாரி டி.பொன்னுச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாஞ்சோலை தோட்டத்தை வனப்பகுதியாக மாற்றக்கோரிய வழக்கு.. ஆக.14ம் தேதி விரிவான விசாரணைக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.