கொல்கத்தா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.11) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு ஐபிஎல் சீசனை விட்டு ஏற்கனவே மும்பை அணி வெளியேறி விட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தின் வெற்றி, தோல்விகள் அந்த அணியை முற்றிலுமாக பாதிக்காது. அதேநேரம், கொல்கத்தா அணிக்கு அப்படி அல்ல. இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு ஏறத்தாழ வாழ்வா? சாவா? என்பது போலத் தான்.
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தொடர முடியும். அதேநேரம் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்து வெளியேறும் எண்ணத்தில் மும்பை அணியும் விளையாடக் கூடும்.
வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக விளையாடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடும் ஜேம்ஸ் ஆண்டர்சன்! எப்போது ஓய்வு? - James Anderson Retired