ஐதராபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்.29) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள் மட்டும் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 157 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ஹர்ஷித் ராணா 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக டெல்லி வீரர் அபிஷேக் பொரெலை ஸ்டம்ப் அவுட் செய்த ஹர்ஷித் ராணா அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் உடல் மொழியை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியின் 100 சதவீத சம்பளத்தையும் அபராதமாக விதித்ததுடன், அடுத்த ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதித்துள்ளது.
ஹர்ஷித் ராணா இப்படி செய்வது இது முதல் முறையல்ல. முன்னதாக சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடிய போது அபிஷேக் சர்மாவை அவுட் செய்த போதும், இதேபோல சைகைகளை செய்ததால் முதல் முறை அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அவர் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிவருவதாக கூறி ஐபில் நிர்வாகம், தண்டனையை கடுமைப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: டாஸ் வென்று லக்னோ பந்துவீச்சு தேர்வு! பிளே ஆப் சுற்றில் நீடிக்குமா மும்பை இந்தியன்ஸ்! - IPL 2024 MI Vs LSG Match Highlights