ஐதராபாத்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் The Hundred 2024 ஆடவர் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரென் பொல்லார்ட் விளையாடி வருகிறார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துருக்கி நாட்டவர் யூசுப் டிகெக்கை இமிடேட் செய்வது போல் களத்தில் பொல்லார்ட் நடந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஓவெல் இன்வெசிபில்ஸ் அணி வீரர் டொனவேன் பெராரியாவின் விக்கெட்டை வீழ்த்திய பொல்லார்ட் அதை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது துப்பாக்கியால் சுடுவது போல் மைதானத்தில் நின்று பொல்லார்ட் போஸ் கொடுத்தார். பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற துருக்கி நாட்டு வீரர் யூசுப் டிகெக்கை இமிடேட் செய்வது போல் இருந்தது.
Kieron Pollard imitating the iconic pose 😂#TheHundred2024 pic.twitter.com/FkRMcbfNNO
— Mr.45 (@optimum_prime45) August 19, 2024
பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் துருக்கி நாட்டை சேர்ந்த யூசுப் டிகெக் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்றதற்காக வைரலானதை விட போட்டி களத்தில் அவர் தோற்றம் சமூக வலைதளத்தில் பெரும் பேசு பொருளாக அமைந்தது. மற்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர், வீராங்கனைகள் பல்வேறு பாதுகாப்பு கவசங்கள், கண்ணை மறைக்கும் வகையில் திரை உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு போடியில் கலந்து கொள்ள வந்த போதும், யூசுப் டிகெக் மட்டும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கலந்து கொண்டார்.
இரைச்சல் சத்தம் அதிகம் கேட்காமல் இருக்க காதில் இயர் பட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு, ஒற்றை கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு யூசுப் டிகெக் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அதேபோன்று, பொல்லார்ட் இமிடேட் செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "தோனி ஒன்னும் எனக்கு அண்ணனோ, நண்பரோ இல்ல..."- பகீர் கிளப்பும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்! - MS Dhoni