திருவனந்தபுரம்: கேரளா கிரிக்கெட் லீக் தொடக்க விழா இன்று (ஆக.31) நடைபெற்றது. கேரளா கிரிக்கெட் லீக்கின் பிரான்ட் அம்பாசிடரான மோகன் லால் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் கேரளா விளையாட்டுத் துறை அமைச்சர் வி அப்துரஹிமான், கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
விழாவில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜெயெஷ் ஜார்ஜ், செயலாளர் வினோத் எஸ் குமார், கேரள கிரிக்கெட் லீக் தலைவர் நாசர் மசான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 18ஆம் தேதி மொத்தம் ஆட்டங்களும் நடைபெற திட்டமிட்டுள்ளன.
மொத்தம் ஆறு அணிகள் தொடரில் கலந்து கொள்கின்றன. திருவனந்தபுரம் ராயல்ஸ், கொச்சி புளூ டைகர்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கேலிகட் குளோப்ஸ்டார்ஸ், கொல்லம் செய்லர்ஸ் மற்றும் ஆலப்பி ரிப்பிள்ஸ் ஆகிய ஆறு அணிகள் விளையாடுகின்றன. செப்டம்பர் 2ஆம் தேதி முதலாவது லீக் ஆட்டம் தொடங்குகிறது.
தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரைஇறுதி போட்டிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அட்டவணையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தொடக்க சீசனை இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தவறிவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகை கதி கலங்கச் செய்து உள்ள ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதை அடுத்து மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன் லால் தலைமையில் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். நடிகர் சங்கத் தலைவர் குறித்து நடிகை பார்வதி உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்கள் தெரிவித்து இருந்த நிலையில், முதல் முறையாக மோகன் லால் பொது நிகழ்ச்சியில் தோன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Important: கார் பந்தயம் பாக்கப் போறீங்களா! மறக்கமாக இத படிங்க! - chennai Formula 4 car Race