மெல்போர்ன்: டென்னிஸின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தில் மிக முக்கியமாக ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் தோல்வி அடைந்துள்ளார்.
காலிறுதி போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீரரான டெய்லர் ஹாரி ஃபிரிட்ஸை 7-6, 4-6, 6-2 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னரை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜானிக் சின்னர், நோவக் ஜோகோவிச்சை 1-6, 2-6, 7-6 மற்றும் 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2008ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு நுழைந்த இளம் வீரர் என்ற பெருமையை ஜானிக் சின்னர் பெற்றுள்ளார்.
-
Novak says "no" 🙅 and saves match point! @bondisands • #staycoolunderpressure • #bondisands @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/64BbbSioNn
— #AusOpen (@AustralianOpen) January 26, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Novak says "no" 🙅 and saves match point! @bondisands • #staycoolunderpressure • #bondisands @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/64BbbSioNn
— #AusOpen (@AustralianOpen) January 26, 2024Novak says "no" 🙅 and saves match point! @bondisands • #staycoolunderpressure • #bondisands @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/64BbbSioNn
— #AusOpen (@AustralianOpen) January 26, 2024
நோவக் ஜோகோவிச்: கடந்த 10 முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றியவர் நோவக் ஜோகோவிச். 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான காத்திருப்பு தொடர்வதோடு, 11வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் கனவையும் தற்போது ஜோகோவிச் இழந்துள்ளார். நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டிய பிறகு ஒருமுறை கூட தோற்றதே இல்லை. அந்த சாதனையை தற்போது ஜானிக் சின்னர் தகர்த்துள்ளார்.
இந்த அரையிறுதி தோல்விக்கு பிறகு நோவக் ஜோகோவிச் கூறியதாவது, "அவர் என்னை முற்றிலுமாக ஆட்டமிழக்க செய்தார். இறுதி போட்டிக்கான முழு தகுதியும் அவரிடம் உள்ளது. இது நான் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக மோசமான ஒன்று என நினைக்கிறேன்.
மேலும், ஜானிக் சின்னர் மிக துல்லியமாகவும், சிறப்பாகவும் விளையாடினார். எனது ஆட்டத்தை பொருத்தவரை நான் பல எதிர்மறையான விஷயங்களை செய்துள்ளேன். இந்த தோல்வியை நினைத்து வருந்துகிறேன்" எனத் தெரிவித்தார்.
ஜானிக் சின்னர்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தியதன் மூலம், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை ஜானிக் சின்னர் பெற்றுள்ளார். மேலும், வரும் 28ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெத்வெதேவ்வை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: கே.எல்.ராகுல், ஜடேஜா அபார ஆட்டம்.. வலுவான நிலையில் இந்திய அணி!