ETV Bharat / sports

பிரிட்டீஷ் பாடகியுடன் ஹர்திக் பாண்டியா காதலா? யார் அந்த ஜாஸ்மின் வலியா? ரகசியம் உடைந்தது எப்படி? - Hardik Pandya Dating jasmine walia - HARDIK PANDYA DATING JASMINE WALIA

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, பிரிட்டீஷ் பாடகி ஜாஸ்மின் வலியாவுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

Hardik Pandya - Jasmine Walia
Hardik Pandya - Jasmine Walia (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 12:57 PM IST

டெல்லி: இலங்கை அணிக்கு கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா கிரீஸ் நாட்டில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். இந்நிலையில், அவரும் பிரிட்டீஷ் பாடகி ஜாஸ்மின் வலியாவும் ரகசியமாக காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

கிரீசில் பாடகி ஜாஸ்மின் வலியாவுடன் ஹர்திக் பாண்ட்யா தனது விடுமுறைய கழித்து வருவதாக சொல்லப்படுகிறது. கிரீஸ் நாட்டில் விடுமுறையை செலவிட்டு வரும் ஹர்திக் பாண்டியா, தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு முன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் பிரிட்டனை சேர்ந்த பாடகி ஜாஸ்மின் வலியாவும் அதே நீச்சல் குளம் முன் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே நீச்சல் குளம் முன்பு புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஜாஸ்மின் வலியாவின் புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா லைக் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜாஸ்மின் வாலியாவின் அந்த புகைப்படம் மட்டுமின்றி அவரது மற்ற அனைத்து புகைப்படங்களையும் ஹர்திக் பாண்டியா லைக் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த ரசிகர்கள் பலரும் ஜாஸ்மின் வலியாவின் புகைப்படத்திற்கு கீழே சென்று, ஹர்திக் பாண்டியாவும் நீங்களும் காதலில் இருக்கிறீர்களா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதன் மூலமாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புதிதாக காதல் உறவில் இணைந்திருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

டி20 உலக கோப்பை தொடரின் இடையே தனது நீண்ட நாள் காதலி நடாஷா ஸ்டன்கோவிக்குடன் மணமுறிவு பெற்றார். இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வதாக கடந்த ஜூலை 18ஆம் தேதி தங்களது விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். தனது நீண்ட நாள் காதலி நடாஷாவை திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிந்தனர்.

செர்பியாவை சேர்ந்த நடாஷா தனது மகனுடன் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்பினார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது. விவகாரத்து பெற்று ஒரு மாதம் கூடா ஆகாத நிலையில், பிரிட்டீஷ் பாடகியுடன் ஹர்திக் பாண்டியா டேட்டிங் செய்வதாக தற்போது தகவல் பரவி வருகிறது.

இதையும் படிங்க: வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் விவகாரம்; தீர்ப்பு 3வது முறையாக தள்ளி வைப்பு! - vinesh poghat case verdict

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.