ETV Bharat / sports

ஐபிஎல் குவாலிஃபயர், இறுதிப் போட்டிக்கான டிக்கெட் புக்கிங் எப்போது? - ipl qualifier match tickets

IPL Qualifier match tickets: குவாலிஃபயர் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் கோப்பை புகைப்படம்
ஐபிஎல் கோப்பை புகைப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 5:20 PM IST

சென்னை: மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 போட்டி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவதற்கு இன்னும் 7 போட்டிகளே மீதம் உள்ளன.

லீக் போட்டிகள் முடிந்தவுடன், மே 21ஆம் தேதி அகமதாபாத்தில் குவாலிஃபயர் ஒன்று மற்றும் மே 22ஆம் தேதி அகமதாபாத்தில் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனை அடுத்து, மே 24ஆம் தேதி சென்னையில் குவாலிஃபயர் 2 மற்றும் மே 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நான்கு போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ரூபி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மே 20ஆம் தேதியும், மற்றவர்களுக்கு 21ஆம் தேதியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சென்னையில் இறுதிப் போட்டியைக் காண விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத் - கொல்கத்தா ஐபிஎல் ஆட்டம் மழையால் ரத்து! டாஸ் கூட போடப்படாமல் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.