சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் எலிமினேட்டரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குவாலிபையர் 1-ல் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏற்கனவே நடைபெற்ற குவாலிபையர் 1-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விகீ), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விகீ), அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்.
இதையும் படிங்க: இளையராஜாவை வம்புக்கு இழுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ! - RR Team Kanmani Anbodu Kadhalan