ETV Bharat / sports

டெல்லி - லக்னோ மோதல்.. இதை செய்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு! - DC VS LSG - DC VS LSG

DC VS LSG PREVIEW:நடப்பு ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

DC vs LSG கோப்பு புகைப்படம்
DC vs LSG கோப்பு புகைப்படம் (credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 3:45 PM IST

டெல்லி: இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 63 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கு கடுமையான போட்டி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று நடக்கும் 64வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கப்படவுள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இருப்பினும் அந்த அணியின் நெட் ரன்ரேட் மைனஸ் 0.482 ஆக உள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற இந்த ஆட்டத்தில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொருத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி மற்றும் அடுத்ததாக மும்பை அணியுடனான போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக கருதப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்: நடப்பு சீசனில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியதாக இருப்பதால் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தரமான பந்து வீச்சு டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி..பிளே ஆஃப் வாய்பை தக்கவைத்தது! - RCB Vs DC

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.