ETV Bharat / sports

சாய் கிஷோர் சுழலில் சிக்கிய பஞ்சாப்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்! - PBKS vs Gujarat Titans - PBKS VS GUJARAT TITANS

IPL PBKS vs GT Match Result: சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

Pbks vs Gt Match Result
Pbks vs Gt Match Result
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 7:35 AM IST

முல்லன்பூர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸை எதிர் கொண்டது. சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சாம் கரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் -குஜராத் அணியின் பந்து வீச்சில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 மட்டுமே அந்த அணியால் சேர்க்க முடிந்தது.

அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 35 ரன்களும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களும் குவித்தனர். சிறப்பாக பந்து வீசிய தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.

போட்டியின் 3.4 ஓவரின் போது அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் 13 ரன்கள் எடுத்து இருந்த விருத்திமான் சாஹா தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் கேப்டன் சுப்மன் கில்வுடன் கைகோர்த்த சாய் சுதர்சன் ஜோடி அணியின் ஸ்கோரை நிதனமாக உயர்த்தினர்.

இதில் சுப்மன் கில் 35 ரன்களுக்க்கு அவுட் ஆகி வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் வந்த வேகத்தில் 4 ரன்களுக்கு வெளியேற, மறுபுறம் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் 31 ரன்களுக்கு வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஓமர்சாய் 13 ரன்களும், ஷாரூக்கான் 8 ரன்களும், ரஷித் கான் 3 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபுறம் கடைசிவரை களத்தில் இருந்த ராகுல் திவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார்.

இதனால், 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். இந்த போட்டி தொடங்குவதற்கு முன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்த குஜராத், இந்த வெற்றியின் மூலம் 2 இடங்கள் முன்னேறி தற்போது புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்துள்ள பஞ்சாப் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி அவுட் நோ-பாலா?.. சர்ச்சையின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.