லக்னோ: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 48வது லீக் போட்டியில் மும்மை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர் கொண்டது.
ஏக்னா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்தது மும்பை அணி. இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர்.
இதில், 4 ரன்களுக்கு ரோகித சர்மா அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 7 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேற, மறுபுறம்10 ரன்கள் எடுத்து இருந்த சூர்யா குமார் யாதவ் நிலையில் ஸ்டோனிஸ் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹார்திக் பாண்டிய கேல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்சி கொடுத்தார். இதனால் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை. இதன் பின்னர் இஷான் கிஷன் மற்றும் நேஹால் வதேரா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர்.
இதில் இஷான் 32 ரன்களுக்கு, வதேரா 46 ரன்களுக்கு வெளியேறினர். இறுதியில் களமிறங்கிய டிம் டேவிட் 35 (18) கொஞ்சம் அதிரடியாக விளையாடினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.
இதன் பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அர்ஷின் குல்கர்னி மற்று கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இதில் அர்ஷின் குல்கர்னி டக் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்னான கே.எல்.ராகுல் 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த தீபக் ஹூடா 18 ரன்களுக்கு வெளியேறினார். மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 62 ரன் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி 6வது வெற்றியைப் பதிவு செய்தது லக்னோ, புள்ளி பட்டியலில் 3வது முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் நடத்தை விதிகள் மீறல்: கொல்கத்தா வீரர் ஹர்சித் ராணா ஒரு போட்டியில் விளையாட தடை!