லக்னோ: நடப்பு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. ஏக்னா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சைth தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கியது கொல்கத்தா. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்ஸ்களாக சுனில் நரைன் - சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்தனர். இதில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ரன்களில் வெளியேறினார்.
அடுத்த களமிறங்கிய ரகுவான்சி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். 39 பந்துகளை எதிர் கொண்ட நரைன், 7 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என 81 ரன்கள் குவித்து இருந்த நிலையில் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரசூல் 12 ரன், ரகுவான்சி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங்(16), ஸ்ரேயாஸ் (23), ரமன்தீப் (25) என அவரவர் பங்கிற்கு ரன்களை விளாசினர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது கொல்கத்தா. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, லக்னோ அணி.
கேஎல் ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இதில், அர்ஷின் குல்கர்னி 9 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் - கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இதில், ராகுல் 25 ரன்களிலும், இதனையடுத்து களமிறங்கிய ஹூடா 5 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிங்றகிய எந்த பேட்ஸ்மேனும் பெரியதாக சோபிக்கவில்லை. நிக்கோலஸ் பூரன் 10 ரன், ஆயுஷ் பதோனி 15 ரன், ஆஷ்டன் டர்னர் 16 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய யாரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாவில்லை.
இதனால் 16.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா, புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க: பஞ்சாப்பை பந்தாடிய சென்னை அணி! ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டம்!