ETV Bharat / sports

ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்த கேகேஆர்.. டெல்லியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி! - DC vs KKR - DC VS KKR

DC vs KKR Highlights: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது கேகேஆர்.

DC vs KKR Highlights
DC vs KKR Highlights
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 10:35 AM IST

விசாகபட்டினம்: 17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி - டெல்லி அணி பந்துவீச்சை துவம்சம் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

கேகேஆர் அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன் 85, அங்கிரிஷ் ரகுவன்ஷி 54, ஆன்ட்ரே ரசல் 41 ரன்களும் குவித்தனர். இறுதியில் களமிறங்கிய அசத்திய ரிங்கு சிங் 8 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். டெல்லி அணி தரப்பில் நார்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி , கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 55 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்களும் குவித்தனர். இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர். ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றுள்ளது. இந்த போட்டியில் கேகேஆர் அணி 272 ரன்கள் குவித்தது. இது 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச டீம் ஸ்கோர் ஆகும். இந்த வரிசையில் முதல் 5இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பின்வருமாறு.

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 277 ரன்கள்

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 272 ரன்கள்

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 263 ரன்கள்

4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 257

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 248

இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்! - David Warner IPL Records

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.