ETV Bharat / sports

தென்னாப்பிரிக்காவின் அதிரடி நாயகன் க்ளூஸ்னர் லக்னோ அணியின் பயிற்சியாளராக நியமனம்!

Lance Klusener: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின், உதவி பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Lance Klusener
Lance Klusener
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 11:20 AM IST

லக்னோ: கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, குஜராத், லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐபிஎல் தொடரின் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன் துணை கேப்டனாக செயல்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பயிற்சியாளர் நியமனம்: அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் வீரர், லான்ஸ் க்ளூஸ்னரும் இடம்பிடித்துள்ளார். இவர் தென்னாப்பிரிக்க, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளிட்ட தேசிய கிரிக்கெட் அணிகளுக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார்.

அதே போல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அணிகளில் ஒன்றான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளரக இணைந்துள்ளார்.

அதன்படி தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், சுழற்பந்து வீச்சு ஆலோசகர் பிரவின் தாம்பே, உதவி பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் மற்றும் வியூக ஆலோசகர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோருடன் இணைந்து லான்ஸ் க்ளூஸ்னர் பணியாற்றவுள்ளார்.

லான்ஸ் க்ளூஸ்னர்: தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான லான்ஸ் க்ளூஸ்னர் 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 49 டெஸ்ட்,171 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5482 ரன்களையும் 272 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.