தரம்சாலா: 17வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெற உள்ளது.
இந்த தொடரில் தரம்சாலாவில் நடக்கும் முதல் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 5ல் வெற்றி 5ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வி 2ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதும் அடங்கும். சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமானால் மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
-
Preview but with a great view! 🤩🏔️
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
Here’s talking game strat with Eric! 🗣️💪🏻#PBKSvCSK #WhistlePodu 🦁💛@TVSEurogrip pic.twitter.com/89IHAGRAAS
சிஎஸ்கேவில் பவுலிங்கில் மாற்றாம்: கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக துஷார் தேஷ்பாண்டே விளையாடவில்லை, அதே போல் தீபக் சஹார் கடந்த போட்டியில் ஒரு ஓவர் கூட முழுமையாக வீச முடியாமல் வெளியேறினார். முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கேதசம் திரும்பியுள்ளார்.
இதனால் இன்றைய போட்டியில் துஷார் தேஷ்பாண்டே அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது, அதேபோல் மிட்செல் சாண்ட்னர் அல்லது இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் செளத்ரி ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
-
𝐓𝐡𝐞 𝐏𝐫𝐢𝐝𝐞 𝐨𝐟 𝐏𝐮𝐧𝐣𝐚𝐛! 🦁
— Punjab Kings (@PunjabKingsIPL) May 5, 2024
Sadde shers are ready to pounce in this battle of Kings at Dharamshala! 👑🏟️#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #PBKSvCSK pic.twitter.com/yY37yyQuCr
பஞ்சாப் கிங்ஸ்: பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் 10 போட்டிகளில் 4ல் வெற்றி 6ல் தோல்வி என 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.
மும்பை அணிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியை 5 முறை தொடர்சையாக வீழ்த்திய பெருமிதத்துடன் வலம் வரும் பஞ்சாப், சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவை சிதைக்குமா? அல்லது பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியுற்ற சிஎஸ்கே இந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்குமா, என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: பெங்களூரு அணிக்கு பயம் காட்டிய குஜராத்.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய டிகே!