பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் நேற்றைய போட்டியில் இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் கால் பகுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்தது. அதன் பிறகு இந்திய அணி மெதுவாக ஆட்டத்திற்குள் வரத் தொடங்கியது. இரண்டாவது கால் பகுதியில் இந்திய அணியின் வீரர் மந்தீப் சிங் தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். இதன் மூலம் 2ஆம் கால் பகுதி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதற்கு அடுத்தபடியாக இந்தியா வீரர் விவேக் பிரசாத் ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். மூன்றாவது கால் பகுதி முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த நடந்த நான்காவது கால் பகுதியில் நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தது. இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி: இந்நிலையில் ஹர்மன்பிரீத் சிங் தனக்கு அளிக்கப்பட்ட பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி கோல் அடித்ததால் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தைத் தோற்கடித்தது. அதற்கு அடுத்தப்படியாக வருகின்ற 29ஆம் தேதி இந்திய அணி அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
Update: INDIA MEN'S HOCKEY TEAM POOL MATCH👇
— SAI Media (@Media_SAI) July 27, 2024
Mission #ChakdeIndia💯😍
Our #MenInBlue 🇮🇳 gave a solid performance against New Zealand 🇳🇿, defeating the Kiwis 3-2 in a thrilling match @TheHockeyIndia pic.twitter.com/7uEhfuRb81
குத்துச்சண்டை போட்டியில் ப்ரீத்தி பன்வர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்: அடுத்ததாக நடைபெற்ற 54 எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சார்ந்த 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் என மொத்தம் 7 பேர் கலந்துகொண்டனர். இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் 20 வயது நிரம்பிய இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வர் மற்றும் வியட்நாமை சேர்ந்த வீராங்கனை வோ தி கிம் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றியைப் பதித்தார். இதன்மூலம் இவர் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். அவர் அடுத்த சுற்றில் கொலம்பியாவை சேர்ந்த வீராங்கனை யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த போட்டி வருகின்ற 31ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
Result Update: Women's #Boxing 54kg Preliminary Round of 32👇🏻
— SAI Media (@Media_SAI) July 27, 2024
An outstanding debut performance by our explosive 🥊 boxer Preeti Pawar at #ParisOlympics2024💪🏻
Vietnam’s 🇻🇳 Vo Thi Kim Anh gave her a stiff test, but Preeti prevailed against all odds.@BFI_official pic.twitter.com/T0cwXkw1D7
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்: பதக்கம் வெல்வாரா மனு பாக்கர்? 2வது நாளில் இந்திய வீரர்களின் அட்டவணை!