ஐதராபாத்: மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வாரம் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், வழக்கு சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "இத்தனை வருடங்களில் எதுவும் மாறவில்லை. கொல்கத்தாவில் நடந்த இந்த கொடூரத்தால் முற்றிலும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இந்த வழக்கில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்படுவது முக்கியம். எங்களுக்கு நீதி வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
INSTAGRAM STORY OF SHREYAS IYER 🔥
— Johns. (@CricCrazyJohns) August 15, 2024
- Justice for Women...!!!!! pic.twitter.com/NQsmittPcM
அதேபோல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, பெண்களை தங்கள் பாதையை மாற்றச் சொல்லாதீர்கள், அவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களே தங்களது பாதையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் எதை அடைய வேண்டும் என விரும்புகிறாளோ அதற்கு அவள் தகுதியானவள்" என்று பதிவிட்டுள்ளார்.
Jasprit Bumrah's Instagram story . 🙏 pic.twitter.com/xMf6lObHQq
— ` (@FourOverthrows) August 15, 2024
முன்னதாக பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் மனைவி உபாஸனா கொனிடேலா, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்திற்கு கணடனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு பிளேயருக்கு ரூ.2 கோடி.. மொத்த காசும் வீணா? தமிழ் தலைவாசின் திட்டம் என்ன? - PKL season 11 Auction