ETV Bharat / sports

Ind Vs Eng 4th Test: இந்தியா அபார வெற்றி! தொடரையும் கைப்பற்றியது! - இந்தியா இங்கிலாந்துடெஸ்ட்கிரிக்கெட்

Ind Vs Eng 4th Test Cricket:இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 3:20 PM IST

Updated : Feb 26, 2024, 3:25 PM IST

ராஞ்சி : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 ரன்களிலும், 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரில் 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையடிய இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 90 ரன்களும் எடுத்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர்.

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் ஷேக் க்ராவ்ளே (60 ரன்) தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்திப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி இலக்கை வேகமாக துரத்தியது.

அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும், அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 55 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் வீழந்தாலும், நிதானமாக விளையாடிய சுப்மான் கில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

61 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அபாரமாக விளையாடிய துருவ் ஜுரல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலி! இந்தியாவிலேயே கோலி தான் முதல் ஆளாம்! என்ன தெரியுமா?

Last Updated : Feb 26, 2024, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.