தம்புள்ளை: ஆசிய மகளிர் கோப்பைக்கான டி20 போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் இன்று (ஜூலை 21) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
For her blistering counter-attacking knock of 64* off 29 balls, @13richaghosh is named the Player of the Match 👏
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
Scorecard ▶️ https://t.co/fnyeHav1sS#WomensAsiaCup2024 | #ACC | #INDvUAE pic.twitter.com/YAOm2a9gDA
இதில் டாஸ் வென்ற யுனைடெட் அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய மகளிர் அணியில் தொடக்க வீரர்களாக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. இருவரும் பார்ட்னர்ஷிப்பில் பெரிதும் ரன்கள் குவியும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின் களம் கண்ட ஹேமலதாவும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து இந்திய மகளிர் அணி திணறியது.
இந்நிலையில் களம் கண்ட கவுர் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை குவிக்க ஆரம்பித்தார். ரிச்சா கோஷ் - கவுர் பார்ட்னர் ஷிப்பில் இந்திய அணிக்கு 50 ரன்கள் வந்தன. 15வது ஓவரில் ரிச்சா கோஷ் அடுத்தடுத்து ஹெட்ரிக் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 19வது ஓவரும் கவுருக்கு சாதகமாக அமைய சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசி அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்களை இந்திய மகளிர் அணி குவித்தது.
2⃣ wins in 2⃣ Matches 🙌
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
Another clinical performance, another comprehensive victory for #TeamIndia as they beat the United Arab Emirates by 78 runs 👌
Scorecard ▶️ https://t.co/fnyeHav1sS#WomensAsiaCup2024 | #ACC | #INDvUAE
📸 ACC pic.twitter.com/NaKha21O7m
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்க, தொடக்கத்தில் தீர்த்த சதீஷ் - இஷா ரோஹித் ஜோடி விளையாடியது. முதல் 2 ஓவருக்கு பெரிதாக ரன்கள் கிடைக்கவில்லை என்றாலும் 3 வது ஓவரில் இருவருமே தலா ஒரு பவுண்டரியை விளாசினர்.
வெறும் 4 ரன்னில் தீர்த்த சதீஷ் ஆட்டமிழக்க, ரினித்தா ரஜித் களம் கண்டார் வந்த முதல் பந்தில் பவுண்டரி விளாசினார். அவரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. பின்னால் வந்த சமைர தர்னிதர்காவும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க விக்கெட்டுகளை இழந்து அணி திணறியது.
இந்நிலையில் தான் கவிஷா நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார். மேலும், இவருக்கு ஆதரவாக இஷா விளையாடினார். இருவரின் பார்ட்னர் ஷிப்பில் அணிக்கு ரன்கள் குவிந்தன. 15 ஓவர்கள் முடிவில் 94 - 4 என்ற கணக்கில் அணி விளையாடியது. இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய இஷா அவுட் ஆக அடுத்து வந்த இருவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவிற்கு 123 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இப்போட்டியில், இந்திய அணியில் கவுர் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 64 ரன்களும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தி உள்ளனர். யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகபட்சமாக கவிஷா 40 ரன்களும், இஷா 38 ரன்களும் விக்கெட்டில் கவிஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ராகுல் டிராவிட், தோனியை திடீரென பாராட்டிய ரோகித், ரிஷப்! - Rohit Sharma