டம்புலா: இலங்கையில் 9வது மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன்படி நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் மற்றும் முர்சிதா கடுன் ஜோடி துவக்கம் தந்தது.
ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி தடுமாறி வந்தது. அடுத்தடுத்து திலாரா அக்தர் 6 ரன்களிலும், முர்சிதா கடுன் 4 ரன்களிலும், இஷ்மா தஞ்சிம் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ருமானா அஹமத்தும் 1 ரன்னில் வெளியேற, வங்கதேச அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
𝐈𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐧𝐚𝐥 🙌🙌
— BCCI Women (@BCCIWomen) July 26, 2024
A formidable win against Bangladesh takes #TeamIndia into the Final and makes it 4⃣ wins in 4⃣ matches 👌👌
Scorecard ▶️ https://t.co/JwoMEaSoyn#INDvBAN | #WomensAsiaCup2024 | #ACC | #SemiFinal pic.twitter.com/2E1htJVcCp
இந்நிலையில், வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா மட்டுமே தன் பங்கிற்கு 32 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதனையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி துவக்கம் தந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடி 11 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 2 பவுண்டரிகள் உட்பட 26 ரன்கள் எடுத்தும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
இதன்படி, இந்திய அணி 83 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுது பெற்றது. இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 ரன்கள் மட்டுமே கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிரான்சில் ரயில்கள் மீது தாக்குதல்! பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பதற்றமா?