ETV Bharat / sports

IND vs SA 2nd T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? போட்டியை எப்படி பார்ப்பது? - INDIA VS SOUTH AFRICA SECOND T20

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்பது குறித்த ஒரு அலசலை இங்கே காணலாம்.

India vs South Africa T20
India vs South Africa T20 (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 3:29 PM IST

ஐதராபாத்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு கெபெர்ஹா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக கடந்த 8ஆம் தேதி டர்பனில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (107 ரன்) சதம் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதம் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.

முழு பார்மில் இந்தியா:

இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரில் இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் முழு பார்மில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் லேசாக சொதப்பிய அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில் பேட்டிங்கில் இந்திய அணி முழுமை பெற்றதாக காணப்படும். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

எளிதில் எடுக்கக் கூடாத தென் ஆப்பிரிக்கா:

அதேநேரம் தென் ஆப்பிரிக்க அணியை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சொந்த மண்ணில் எப்போது வேண்டுமானாலும் அந்த அணி முழு பார்முக்கு திரும்பும் என்பதால் இந்திய வீரர்கள் கடும் உஷாருடன் விளையாட வேண்டும். இன்றைய போட்டி நடைபெறும் மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணி ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இன்றைய ஆட்டம் நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கக் கூடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி இதே மைதானத்தில் இந்திய அணி 180 ரன்கள் குவித்தது. அது தான் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். ஆனால் அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா டக் வொர்த் லிவீஸ் விதிப்படி வெற்றி பெற்றது.

மைதானம் கூறுவது என்ன?:

இதுவரை இந்த மைதானத்தில் 9 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றி கண்டுள்ளன. இந்த மைதானத்தில் 170 ரன்கள் எடுத்தாலே எதிரணிக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய ஸ்கோராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் டாஸ் வெல்லும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையும் எனத் தெரிகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை Sports18 ம்ற்றும் JioCinema-வில் நேரலையாகவும், DD Sports சேனலிலும் பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:

இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சகரவர்த்தி, அவேஷ் கான், ஜிதேஷ் சர்மா, விஜய்குமார் வைஷாக், ராமன்தீப் சிங், யாஷ் தயாள்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், நகாபயோம்ஸி பீட்டர், மிஹ்லலி ம்பொங்வானா, டோனோவன் ஃபெர்ரேரிக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ்.

இதையும் படிங்க: புது வரலாறு படைத்த பாகிஸ்தான்! 22 ஆண்டுகளுக்கு பின் முதல் முறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.