டெல்லி: அடுத்த ஆண்டு இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. 1990ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2024 -27 வரையிலான கிரிக்கெட் தொடர்களை நடத்து தொடர்பாக விருப்பம் உள்ள நாடுகள் விண்ணப்பிக்குமாறு கடந்த ஜூலை 27ஆம் தேதி அறிவித்து இருந்தது.
அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்று உள்ளது. 2027ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை வங்கதேசம் பெற்று உள்ளது.
மொத்தம் ஆறு அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக லீக் சுற்று ஆட்டங்களுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 6வது மற்றும் கடைசி இடத்திற்கான அணி தகுதிச் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், பயணத் தடை காரணமாக இந்தியா அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை 50 ஓவர் வடிவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 2016ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வங்கதேசம் நடத்தியது. அதன்பின் 2027ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முழுவதுமாக பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய வீரர்கள் விளையாடும் ஆட்டங்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அந்த அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. மேலும், கடைசியாக நடைபெற்ற 4 ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 3வது கோப்பையும் இதுவாகும்.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: நூலிழையில் பதக்கத்தை கோட்டை விட்ட அர்ஜூன் பபுதா! - Paris Olympics 2024