கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (ஆக.2) தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Things went down to the wire in Colombo as the match ends in a tie!
— BCCI (@BCCI) August 2, 2024
On to the next one.
Scorecard ▶️ https://t.co/4fYsNEzggf#TeamIndia | #SLvIND pic.twitter.com/yzhxoyaaet
அதன்படி, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிஸ்ஸங்க - பெர்னாண்டோ ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெர்னாண்டோ பெவிலியன் திரும்பிச் சென்றார். பின்னர், நிஸ்ஸங்க உடன் குசல் மெண்டிஸ் கைகோர்க்க இருவரும் விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தனர். 10 ஓவர் முடிவிற்கு 37-1 என்ற கணக்கில் விளையாடியது.
இந்நிலையில் தான் ஷிவம் துபே வீசிய பந்தில் குசல் மெண்டிஸ் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் களம் கண்ட சமரவிக்ரம சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, அசலங்கா களம் கண்டார். இந்நிலையில் தான் நிஸ்ஸங்க தனது அரை சதத்தை பதிவு செய்தார். 25 ஓவர்கள் முடிவில் 94-4 என்ற கணக்கில் அணி விளையாடியது.
சிறப்பாக விளையாடிய நிஸ்ஸங்க வாஷிங்டன் சுந்தர் வீசிய அபார பந்தைச் சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த ஜனித் லியனகே, துனித் வெல்லலகே நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். அந்த வகையில், 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 230 ரன்களைக் குவித்தது. இதில், துனித் வெல்லலகே 67 ரன்களும், ஹசரங்கா 24 ரன்களையும் குவித்தனர்.
A thrilling start to the #SLvIND ODI series.
— BCCI (@BCCI) August 2, 2024
The First ODI ends in a tie.
Scorecard ▶️ https://t.co/4fYsNEzggf#TeamIndia pic.twitter.com/ILQvB1FDyk
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களம் கண்டது. தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. இதில் முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மா சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். பின்னர் 3வது ஓவரும் ரோகித்துக்கு சாதகமாக அமைந்தது. அதிலும், சிக்ஸ் பவுண்டரி என மாறி மாறி விளாசினார்.
ரோஹித்க்கு பக்கபலமாக இருந்த சுப்மன் கில் வெல்லலகே வீசிய பந்தில் அவுட் ஆனார். 35 ஓவர்கள் இருக்கும் நேரத்திலேயே ரோஹித் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் களத்தில் விராட் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி களமிறங்கியது. இருவருமே பெரிதாக ரன்களை குவிக்க வில்லை. இருவருமே எல்பிடபிள்யூ ஆகி விட்டனர்.
களத்தில் ஷ்ரேயர் ஐயர் - கே.எல்.ராகுல் ஜோடி களம் கண்டது. இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். 30 ஓவர்கள் முடிவிற்கு 149 - 5 என்ற கணக்கில் விளையாடியது. இந்திய அணியில் பின்னர் வந்த அக்சர் பட்டேல் - ஷிவம் ஜோடி மட்டுமே ஆளுக்கு 25 ரன்களை குவித்தனர்.
அதன்பின் வந்த குல்தீப் யாதவ் - அர்ஷதீப் ஜோடி சொற்ப ரன்னில் அவுட் ஆகி ஆட்டத்தை இழந்தனர். அதன்படி 47.5 ஓவர் முடிவிற்கு இந்திய அணி 230 ரன்களை குவித்ததால் இந்த மேட்ச் டை ஆனது. இதற்கான சூப்பர் ஓவர்கள் இன்று நடைபெறாது எனவும் தேதி குறித்த அறிவிப்பு எதுவும் நிர்வாகம் தரப்பில் கூறவில்லை.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் வெண்கல வில்வித்தை போட்டியில் இந்திய கலப்பு அணி அதிர்ச்சி தோல்வி! - Paris olympics 2024