ETV Bharat / sports

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு.. சும்மன் கில், பண்ட் சதம் விளாசி அசத்தல்! - India vs Bangladesh - INDIA VS BANGLADESH

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி. இதன் மூலம் வங்கதேச அணிக்கு 514 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட்
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட் (Credit - AP)
author img

By PTI

Published : Sep 21, 2024, 1:56 PM IST

சென்னை: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அதிரடியான ஆட்டத்தில் 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது இந்திய அணி.

வங்கதேச அணியின் இளம் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அபாரமாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 3வது நாள் ஆட்டமான இன்று ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.

இதில் அபாரமாக விளையாடிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி மளமளவென ரன்களைக் குவித்தது. இந்நிலையில், 109 ரன்கள் எடுத்து இருந்து ரிஷப் பண்ட் விக்கெட் இழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும், சுப்மன் கில் 119 ரன்கள் உடனும் களத்தில் இருந்தனர். அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்னாக இருந்தது.

இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸையும் சேர்த்து 514 ரன்கள் குவித்துள்ளது. தற்போது 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவை மேளதாளத்துடன் வரவேற்ற சொந்த மண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.