பார்படோஸ்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
An action-packed first innings 💥
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
India have put on 176/7 on the board courtesy of Virat Kohli's fighting 76 in the all-important Final 👏#T20WorldCup | #SAvIND | 📝: https://t.co/AjkZFhTXML pic.twitter.com/oEJPAJ8WKc
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இறுதி போட்டி பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடங்கினர்.
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரி அடித்து விராட் கோலி அதிரடி காட்டினார். மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பன்ட் வந்த வேகத்தில் கேசவ் மகாராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
The man for the big occasion 👏
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
Virat Kohli raises the bat to celebrate an @MyIndusIndBank Milestone at the #T20WorldCup Final 🏏#SAvIND pic.twitter.com/T41OvkfKNZ
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கஜிசோ ரபடா பந்துவீச்சில் ஹென்ரிச் கிளெசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலியுடன் கைகோர்த்த அக்சர் பட்டேல் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அடுத்தடுத்து சிக்சர்களை பறக்க விட்ட அக்சர் பட்டேல் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனிடையே அரை சதம் கடந்த விராட் கோலி அதிரடி காட்டத் தொடங்கினார். ரபடா பந்தில் இமாலய சிக்சரை பறக்க விட்டு குழுமியிருந்த இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினார். விராட் கோலி தன் பங்குக்கு 76 ரன்கள் அடித்து கொடுத்து மார்கோ ஜான்சன் பந்தில் கஜிசோ ரபாடாவினம் கேட் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடி இந்திய அணி 170 ரன்களை தாண்ட உதவினர். ஏதுவான பந்துகளை பவுண்டரி திருப்பினர். இறுதியில் ஷிவம் துபே 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா (2 ரன்) ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.
Barbados has been electric ⚡😍#T20WorldCup | #SAvIND | 📝: https://t.co/HQ3JjQsrC1 pic.twitter.com/QVioAaZCJf
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன், கஜிசோ ரபடா, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. .
இதையும் படிங்க: LIVE: கோலி அரைசதம்! - IndvsSA T20 World Cup Cricket Final