ETV Bharat / sports

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. புகழ்ச்சி மழையில் பும்ரா! எக்ஸ்பர்ட்களின் கருத்து என்ன? - T20 WORLD CUP

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 2:16 PM IST

IND Vs PAK T20 world cup: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து சச்சின், மைக்கேல், சேவாக் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் ஜாம்வன்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

IND VS PAK
IND VS PAK (Credit - ANI)

நியூயார்க்: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள முடியாமல் திணறியது. இதனால் 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் சேர்த்தது இந்தியா. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான். தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து விளையாடியதைப் பார்க்கும் போது 10 ஓவர்களில் ஆட்டமே முடித்துவிடும் என எண்ணிக்கொண்டு இருந்த வேளையில், ஆட்டத்தின் போக்கை மாற்றினார் பும்ரா.

முதலில் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் பும்ரா.

அவரின் ஓவர்களால்தான் ஆட்டம் இந்தியா பக்கமே திரும்பியது. அதேபோல் ஹர்திக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர். இந்திய அணியின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான்களும், எக்ஸ்பர்ட்ஸ்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்: "புதிய கண்டத்தில் நடைபெற்றது இந்தியா - பாகிஸ்தான் போட்டி. ஆனால், முடிவு அதேதான். டி20 போட்டி என்பது பேட்ஸ்மேன்களுக்கானதாக இருக்கலாம். ஆனால், நியூயார்க்கில் பந்து வீச்சாளர்களுக்கானதாக மாறிவிட்டது. அமெரிக்காவில் ஒரு விறுவிறுப்பான போட்டி. நன்றாக விளையாடியது இந்தியா" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீரேந்தர் சேவாக்: "தோல்வியிலிருந்து வெற்றி பெற வைப்பவர் பும்ரா என்று அழைக்கப்படுகிறார். நியூயார்க்கில் ஒரு அற்புதமான வெற்றி" என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

மைக்கேல்: "சில நேரங்களில் மோசமான ஆடுகளங்கள் சிறந்த ஆட்டங்களை உருவாக்குகின்றன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டமும் ஒன்று. பாகிஸ்தான் எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி இருப்பார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறினார்.

இர்பான் பதான்: அர்ஷ்தீப் சிங் ஒரு கிங் மற்றும் பும்ரா தான் என்னுடைய ஹீரோ என முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட் திரும்பி வந்ததிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இங்கிலாந்து.. சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.