ETV Bharat / sports

இந்தியாவுக்கு வந்த பெரும் சிக்கல்! இதை விட்ட இனி அவ்வளவு தான்! - IND VS NZ 3RD TEST CRICKET

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியை தழுவினால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் எப்படி சிக்கல் ஏற்படும் என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
File Photo (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 30, 2024, 10:39 AM IST

ஐதராபாத்: கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் 2019- 2021, மற்றும் 2021- 2023 ஆகிய இரண்டு சீசன்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று கடைசியில் தோல்வியை தழுவியது.

முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியிடமும், இரண்டாவது சீசன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் இந்தியா கோப்பையை கோட்டைவிட்டது. இந்நிலையில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியில் இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளது.

அதேநேரம், நியூசிலாந்து அணியிடம் கண்ட அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் இந்திய அணி நிலை தடுமாறி உள்ளது. நியூசிலாந்திடம் அடுத்தடுத்து இரண்டு தொடர் தோல்விகளை கண்டதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 62.82 சதவீதத்திற்கு இறங்கி உள்ளது.

அதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணி தனது மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வரும் 1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஏற்கனவே தொடரை நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்டத்திலும் இந்தியா தோல்வியை தழுவினால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைவதை சிக்கலாக்கும் எனக் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் இந்திய அணி இழக்கும் பட்சத்தில் அடுத்து தொடங்க உள்ள ஆஸ்திரேலிய தொடர் மிகக் கடுமையானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து குறைந்தது 4 போட்டிகளில் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பயன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய முடியும் என சொல்லப்படுகிறது.

அதேநேரம், இந்திய அணி இன்னும் ஒரு தோல்வியை சந்தித்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். அதேநேரம் தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் இன்னும் இறுதிப் போட்டி வாய்ப்பில் நீடிப்பதால் அது இந்தியாவை மேலும் பின்னுக்குத் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெண் தோனியின் சாதனையை முறியடித்த பெண் விராட் கோலி! நியூசியை பழிதீர்த்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.