ETV Bharat / sports

ஆர்சிபி தகுதிச் சுற்றில் நுழைந்தது எப்படி? பெங்களூரு 'ஹீரோ' யாஷ் தயாள் சிறப்பு பேட்டி! - YASH DAYAL

Yash Dayal: இன்று ஒரு வெற்றியாளராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு எனது பெற்றோரின் தியாகம் தான் காரணம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 10:47 PM IST

ஆர்சிபி பந்து வீச்சாளர் யாஷ் தயாள் புகைப்படம்
ஆர்சிபி பந்து வீச்சாளர் யாஷ் தயாள் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டி நேற்று முன்தினம் (மே 18) நடந்து முடிந்திருக்கிறது. வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாதித்திருக்கிறது. கடந்த ஏப்.21ஆம் தேதி பெங்களூரு அணி 8 போட்டிகள் விளையாடி வெறும் 1 போட்டி மட்டுமே வென்றிருந்தது.

அவ்வளவுதான் பெங்களூரு அணி ஐபிஎல் சீசனிலேயே இதுதான் அவர்களது மோசமான சீசன் என விமர்சிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று காட்டி இருக்கிறது. குறிப்பாக இறுதி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நிலையில், அசத்தலான ஓவரை வீசி பெங்களூரு அணியின் வெற்றிக்கு யாஷ் தயாள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

போட்டி முடிந்த பின்பு கேப்டன் டு பிளெசிஸ் கூட, "இந்த ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு சமர்ப்பிக்கிறேன்" என கூறியிருந்தார். கடைசி ஓவரை வீசிய யாஷ் தயாளுக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் பாராட்டித்தள்ளினர்.

இந்த நிலையில், அவரை தொடர்பு கொண்டு பேசினோம், "உண்மையில் எனது கடின உழைப்பே காரணம். அதற்கு முக்கிய காரணம் எனது பெற்றோர். பள்ளிப்படிப்பு முதல் அனைத்திலும் என்னை கவனித்து கொண்டனர். குறிப்பாக விளையாட்டின் மீதான ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொண்டது.

ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். இன்று ஒரு வெற்றியாளராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்களது தியாகம் தான் காரணம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "விராட் கோலி, கேப்டன் டு பிளெசிஸ், முகமது சிராஜ், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இந்த பெருமை சேரும். அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். அழுத்தமான சூழ்நிலைகளில் அதனை அமைதியாக கையாள உதவியாக இருந்தனர். அதேசமயம் அணி நிர்வாகத்திடம் இருந்தும் எனக்கு சரியான ஆதரவு கிடைத்தது.

சர்வதேச வீரர்களுடன் உரையாடுவது நம் மேல் இருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும். ஐபிஎல் ஆக இருக்கட்டும், உள்ளூர் அல்லது ஆஃப் சீசன் போட்டிகளாக இருக்கட்டும், நான் எப்போது அனுபவம் வாய்ந்த வீரர்களுடனேயே உரையாட விரும்புவேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாளை குவாலிபையர் 1ல் KKR Vs SRH.. மழை பெய்தால் ரிசர்வ் டே உள்ளதா? - Srh Vs Kkr

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.