ETV Bharat / sports

அது எப்படி திமிங்கலம்? ஆடவர், மகளிர் படகு போட்டியில் பதக்கம் வென்ற பிரிட்டன் வீரர்! - paris Olympic 2024 - PARIS OLYMPIC 2024

பாரீஸ் ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் பிரிட்டன் வீரர் ஹென்ரி பீல்ட்மேன் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு என இரண்டிலும் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். மகளிர் போட்டியில் ஆண் வீரர் எப்படி பதக்கம் வெல்ல முடியும் என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

Etv Bharat
Henry Fieldman Won Medal With Women's Rowing Team (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 3:34 PM IST

பாரீஸ்: கிரேட் பிரிட்டனை சேர்ந்த ஹென்ரி பீல்ட்மேன் ஆண்கள் துடுப்பு படகுப் போட்டியில் ஏற்கனவே பதக்கம் வென்று இருந்தார். இந்நிலையில், மகளிர் துடுப்பு படகு போட்டியிலும் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார். அது எப்படி ஆண் ஒருவர் மகளிர் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல முடியும் என்று கேள்வி எழலாம்.

அதற்கான விதிமுறைகளை சர்வதேச துடுப்பு படகு சம்மேளனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் சர்வதேச சம்மேளனம் 8 பேர் கொண்ட குழு போட்டிகளில் எந்த பாலினத்தவரும் கலந்து கொள்ளும் விதிமுறைகளை அமல்படுத்தியது. புதிய விதிமுறைகளின் படி பாரீஸ் ஒலிம்பிக் தொடர் மகளிர் துடுப்பு படகு போட்டியில் ஹென்ரி பீல்ட்மேன் கலந்து கொண்டார்.

ஹென்ரி பீல்ட்மேன் உதவியுடன் பிரிட்டன் மகளிர் அணி பாரீஸ் ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் உலக அளவில் ஆண் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சிறப்பை ஹென்ரி பீல்ட்மேன் பெற்றார். இதே பிரிவில் ரூமேனியா மகளிர் அணி தங்கமும், கனடா மகளிர் அணி வெள்ளிப் பதக்கமும் வென்றது.

அதேநேரம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது ஹென்ரி பீல்ட்மேனுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் துடுப்பு படகு போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியை தாண்டி ஹென்ரி ஒரு சிறந்த தொழிலதிபராகவும், ஆரம்ப நிலையில் உள்ள வீரர்களுக்கு துடுப்பு படகு போட்டியில் கலந்து கொள்ள பயிற்சியும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விராட் கோலி மேல இவ்வளவு கடுப்பா? வரிந்து கட்டி வந்த இலங்கை வீரர்கள்! வைரல் வீடியோ! - Ind vs SL 2nd ODI Match Highlights

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.