ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “4 வருடம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், நானும், நடாஷாவும் பிரிய முடிவு செய்துள்ளோம்.
ஒன்றாக வாழ எங்களால் முடிந்த அனைத்து முயற்சியும் மேற்கொண்டோம். ஆனால், இறுதியாக விவாகரத்து முடிவை எடுத்துள்ளோம். இருப்பினும், எங்களுடைய குழந்தை அகஸ்தியாவிற்கு நாங்கள் சிறந்த பெற்றோராக இருப்போம். இந்த கடினமான நேரத்தில் எங்களின் தனிப்பட்ட முடிவிற்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அதே வேளையில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இதையும் படிங்க: தேசிய பாரா தடகளப்போட்டி.. 5 பதக்கங்களைக் குவித்த தூத்துக்குடி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! - National Para Athletics TOURNAMENT