பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் போல் வால்ட் விளையாட்டு மூலம் பிரான்ஸ் வீரர் அந்தோனி அம்மிரதி (Anthony Ammirati) உலக அறிந்த நபராக காணப்படுகிறார். ஆடவர் போல் வால்ட் தகுதிச் சுற்றில் அவர் தகுதியிழந்து வெளியேறிய வீடியோ தான் அதற்கு காரணம். ஒரேயொரு வீடியோ மூலம் உலக அறியப்படும் நபராக மாறி உள்ளார் அந்தோனி அம்மிரதி.
கடந்த சனிக்கிழமை (ஆக.3) நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் போல் வால்ட் விளையாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு. நீண்ட குச்சியின் மூலம் 5 அடி உயரத்திற்கு அதிகமான உயரத்தில் உள்ள வெர்ட்டிக்கல் பாரை தாண்டி வீரர்கள் விளையாடினர். அதில் 5.70 மீட்டர் உயரத்தை தாண்டு முயற்சியில் பிரான்ஸ் வீரர் அந்தோனி அம்மிரதி கலந்து கொண்டார்.
ஏற்கனவே இரண்டு முயற்சிகளில் பவுல் செய்த அவர், கடைசி முயற்சியில் எப்படியாவது 5.70 மீட்டர் உயரத்தை தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சித்தார். இந்த முயற்சியில் அவரது கால் லேசாக பார் மீது உரசிய போதிலும், விழவில்லை. ஆனால் தாவுவதை நிறைவு செய்த போது அவரது ஆணுறுப்பு பார் மீது வலுவாக உரசியதால் பார் கீழே விழுந்தது. இதனால் மீண்டும் ஒரு பவுல் முயற்சியை நிறைவு செய்யாததால் அந்தோனி அம்மிரிதி அடுத்து சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
UNUSUAL 😳
— F.M NEWS (@fmnews__) August 3, 2024
🇫🇷French pole vaulter Anthony Ammirati misses the pole and knocks it down with his " bulge" during the paris olympics. #Paris2024 #Olympics pic.twitter.com/TJOUWzR3Ob
அடுத்த சுற்று வாய்ப்பை அந்தோனி அம்மிரிதி இழந்ததால் பிரான்ஸ் ரசிகர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். இதனிடையே, வெர்ட்டிகல் பாரை தண்டிம் போது அவரது உடல் உறுப்பு அதில் உரசிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் அந்தோனி அம்மிரிதியில் ஆணுறுப்பு வெர்ட்டிகல் பார் மீது உரசியதால் அது கீழே விழுவது போல் உள்ளது. பரிதாபமான முறையில் அம்மிரட்டி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் நேரலை வர்ணனையாளர்கள் ஒரு கணம் என்ன செய்வது என தெரியாமல் மவுனமாயினர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், விளையாட்டில் இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் ஜப்பான் வீரர் ஹிரோகி ஒகிடா (Hiroki Ogita) இதே போன்ற சூழ்நிலையால் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து, சமூக வலைதளங்களில் வைரலும் ஆனார். விளையாட்டில் ஈடுபடுபவர்கள் ஆண்மையோடு இருக்க நினைப்பது சகஜம் தான். ஆனால் அந்த ஆண்மையே பதக்க வாய்ப்பை பறித்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயற்சி பெற்றதோ ஜிம்னாஸ்டிக்கில்.. ஆனால் தங்கம் வென்றது துப்பாக்கி சுடுதலில்! யார் இந்த அட்ரியானா ருவானோ! - paris olympics 2024