ETV Bharat / sports

டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லையை வீழ்த்தி திருப்பூர் த்ரில் வெற்றி! யார்க்கர் கிங் நடராஜன் அபாரம்.. - TNPL 2024

Tiruppur Tamizhans vs Nellai Royal Kings: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 23வது லீக் போட்டியில் நெல்லை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்றது.

இரு அணி வீரர்கள்
இரு அணி வீரர்கள் (Credit - TNPL)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 8:52 AM IST

திருநெல்வேலி: டிஎன்பில் கிரிகெட் தொடரின் 23வது லீக் போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ், அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

190 இலக்கு: அதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராதாகிருஷ்ணன் அரைசதம் விளாசினார். அதற்கு அடுத்தபடியாக துஷார் ரெஜா 41 ரன்கள் விளாசினார்.

நெல்லை அணி தரப்பில், சிலம்பரன் 3 விக்கெட்டுகளையும், இம்மானுவேல், சோனு யாதவ், ஹரிஷ் மற்றும் மூர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியின், ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டம் அருண் கார்த்திக் - அஜிதேஷ் குருசுவாமி ஆகியோர் களமிறங்கினர்.

இதில் அஜிதேஷ், முதல் பந்திலே ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் (1 ரன்), அருண்குமார் (6 ரன்) அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் அருண் கார்த்திக், அரைசதம் விளாசிய நிலையில், நடராஜன் வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார்.

திருப்பூர் த்ரில் வெற்றி: இதனையடுத்து ரித்திக் ஈஸ்வரன் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சோனு யாதவ் 40 ரன்களுக்கும் வெளியேற, ரித்திக் ஈஸ்வரன் ரன்கள் எடுத்து இருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து நெல்லை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் அணியில் தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நடராஜன் 50: நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், திருப்பூர் அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இதன் மூலம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட அவர், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இன்றைய போட்டி: டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 24வது லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - ஹரி நிஷாந் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இன்று( வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்; சிக்ஸர் அடித்தால் இனி அவுட்! என்னடா இது பேட்ஸ்மேன்களுக்கு வந்த சோதனை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.