ஐதராபாத்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள தி கோட் படம் வரும் 5ஆம் தேதி உலக அளவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, தனியார் பொழுதுபோக்கு நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, விஜயின் கோட் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கேமியோ ரோல் செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, "கோட் படத்தில் தோனியை நடிக்க வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஐடியா இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது. நாங்கள் நினைப்பது எல்லாம் உடனே செய்தியாக வந்திரும். அதனால் அந்த ஐடியாவை நாங்கள் கைவிட்டோம்.
படத்தில் சென்னை மற்றும் மும்பை இடையில் கிரிக்கேட் போட்டி காட்சிகள் இருக்கின்றன. ஒரு சர்வதேச போட்டியாக இல்லாமல் ஐபிஎல் போட்டியாக இருந்தால் அது மக்களுக்கு கனெட்க் ஆகிக் கொள்ள முடியும் என்று தான் வைத்தேன். அந்த வகையில் ஒரு போட்டியில் மற்ற வீரர்கள் இருப்பது மாதிரியான காட்சிகளையும் நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் தோனி இந்த படத்திற்கு என்று தனியாக வந்து நடிக்கவில்லை" என்று கூறினார்.
இதனால் படத்தின் டிரெய்லர் காட்சிகளில் சென்னை - மும்பை அணிகள் இடையே நடைபெறும் போட்டியில் தோனி இருப்பது காண்பிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு தரப்பில் வெளியாகவில்லை. அதேநேரம் தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்த் தி கோட் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு மூலம் தி கோட் படத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளார். இது தவிர நடிகை திரிஷாவுடன் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்து உள்ளார். இதுவரை தி கோட் படத்தின் 4 பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தி கோட் படம் ரிலீசாக உள்ள நிலையில் இசை வெளியிட்டு விழா குறித்து படக்குழு மூச்சு காட்டாமல் இருந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இசை வெளியிட்டு விழா இன்றி விஜய் படம் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்! கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! - Pakistan vs Bangladesh Test Cricket