சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது தொடர் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ் அணி - டெல்லி தபாங் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்த இந்த போட்டி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
Singles win ✅
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 28, 2024
Doubles win ✅
Skipper Sathiyan is rightfully the @IndianOilcl Player of the Tie in tonight's clash between Dabang Delhi T.T.C. and Athlead Goa Challengers. 🌟💫
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside… pic.twitter.com/nLnFN2xcYv
தபாங் டெல்லி ஆதிக்கம்:
- இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், டெல்லியின் கேப்டன் சத்தியன் ஞானசேகரன், கோவாவின் மிஹாய் போபோசிகாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை சத்தியன் 8-11 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அடுத்த இரு செட்களையும் ஆக்ரோஷமாக விளையாடி 11-9, 11-9 என கைப்பற்றினார். இது டெல்லி அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.
- இதனைத் தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஒரவன் பரனாங் -யாங்சிலியுடன் மோதினார். இதில் முதல் மற்றும் இரண்டாவது செட்டை 11-7, 11-7 முறையே கைப்பற்றினார் பரனாங். கடைசி செட்டை யாங்சிலியு 11-6 என கைப்பற்றினாலும் ஆட்டத்தின் முடிவில் ஒரவன் பரனாங் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- தொடர்ந்து 3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சத்தியன் ஞானசேகரன் மற்றும் ஒரவன் பரனாங் ஜோடி கோவாவின் ஹர்மீத் தேசாய் மற்றும் யாங்சி ஜோடியை எதிர் கொண்டது. இதில் சத்தியன் ஞானசேகரன் - ஒரவன் பரனாங் 11-7, 11-4 என்ற முறையில் வெற்றி பெற்றனர்.
- 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆண்ட்ரியாஸ் லெவென்கோவும் - ஹர்மீத் தேசாயும் விளையாடினார். இதில் முதல் செட்டை ஆண்ட்ரியாஸ் லெவென்கோ 11-7 என கைப்பற்றினார். 2-வது செட்டை ஹர்மீத் தேசாய் 11-8 கைப்பற்றினர். இதனால் 1-1 என்ற சமநிலையிலிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை ஹர்மீத் தேசாய் 11-9 கைப்பற்றி அசத்தினார்.
- கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தியா சித்தலே- யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார். இதில் முதல் செட்டை தியா சித்தலே 11-10 என கைப்பற்றினார். 2-வது செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய தியா சித்தலே 11-6 என தன்வசப்படுத்தினார். கடைசி செட்டை 0-11 என்ற கணக்கில் பறிகொடுத்தாலும், முடிவில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் தியா சித்தலே.
Pocket 𝐃𝐢𝐲𝐚namite 💥❤️
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 28, 2024
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside Indiahttps://t.co/uLA1KxPZIOhttps://t.co/MNdumuGR8g
Tickets available on https://t.co/or5ruqsUAS
🔗https://t.co/OG2cOMu4qB #UTT… pic.twitter.com/g8rWo19rJW
முதல் வெற்றி: தியா சித்தலேவின் சிறப்பான ஆட்டத்தால் கோவா சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்றது டெல்லி தபாங் அணி. அந்த அணி இந்த சீசனில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடதக்கது.
அதே போல் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ் அணி, இந்த ஆட்டதை தோற்றதன் மூலம் இந்த சீசனில் 2-வது தோல்வியைப் பதிவு செய்தது. கோவா அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: மும்பையை தட்டி தூக்கிய தமிழ்நாடு லெவன்! சாய் கிஷோர், லக்சய் ஜெயின் அபாரம்!